Sunday, 2 August 2020

புத்தக விமர்சனம் : கள்வனின் காதலி

கள்வனின் காதலி [Kallvanin Kadhali]கள்வனின் காதலி [Kallvanin Kadhali] by Kalki
My rating: 5 of 5 stars

கள்வனின் காதலி. கல்கியோட மற்றுமொரு மாயாஜாலம். அதிகமா கல்கியோட வரலாற்று புதினங்கள படித்த எனக்கு இந்த புத்தகம் ஒரு புது அனுபவமா இருந்துது.

முத்தையன், கல்யாணி, அபிராமி ஆகிய 3 பேரோட கொள்ளிட கிராமத்துல ஆரம்பிக்கும் கதை அவுங்க வாழ்க்கையோட சேர்ந்து பல இடங்களுக்கு பயணிக்குது. முத்தையனின் காதலுக்குரியவள் கல்யாணி, பாசத்திற்குரிய தங்கை அபிராமி. இவர்களை சுற்றி நடக்கும் சின்ன சின்ன சம்பவங்கள் அவர்கள் வாழ்க்கய எப்படிலாம் மாற்றுதுனு விறுவிறுப்பா சொல்லிருக்கார் கல்கி.


சிறப்பான தரமான சம்பவங்கள் :

  • விவரிப்பு + வர்ணணை - கல்கியோட சிறப்பான ஆயுதங்கள். ஒவ்வொரு இடத்தையும் அவர் விவரிக்குரப்போ நாம அந்த இடத்துல வாழ ஆரம்பிச்சுடுரோம். அவர் வர்ணணைல இருக்க கவித்துவம் நாம் நிஜ வாழ்வுல அப்படிப்பட்ட இடம் இருக்காதானு ஏங்க வைக்குது. நம்மள களத்துல வாழ வைச்சுட்டு கதை சொல்லுரதுல கல்கி கில்லாடி!
  • இந்த கதைய ஒரு சமூக புதினமா மாற்றிய விதம். ஒரு நாணயத்துக்கு எப்பவும் இரண்டு பக்கம் இருக்கும், நன்மையும் தீமையும் ஒன்றுக்கொன்று எவ்வளவு பினைந்திருக்கு, அன்பு ஒருத்தர என்னவெல்லாம் பண்ண வைக்கும், சமூகம் எப்படிப்பட மனிதர்கள உள்ளடக்கியிருக்கு, ஒரு சிலரோட தவறுகள், அலட்சியங்கள் லாம் மற்றவர்கள எவ்வளவு பாதிக்க வாய்ப்பிருக்கு னு பல கருத்துக்கள் இந்த புத்தகத்துல இருக்கு. ஆனா இத எல்லாத்தயும் ஒரு அழகான கதைக்குல கச்சிதமா வச்சுட்டார் கல்கி.
  • விறுவிறுப்பு. முன்னமே சொன்ன மாதிரி இது ஒரு விறுவிறுப்பான கதை. கோபம், பாசம், காதல், குழப்பம் போன்ற உணர்வுகளும் கொட்டி கிடக்கு கதையில். ஒவ்வொறு முறை புத்தகத்த மூடுரப்பவும் மிகவும் சிரமப்பட்டேன்.
  • துணை கதாபாத்திரங்களும் சிறப்பா வடிவமைக்கப் பட்டிருக்கு. ஒன்ரிண்டு கதாபாத்திரங்கள் தவிர அனைவரும் மனதில் நிற்கிறார்கள்!


இந்த டைட்டானிக் படத்த இன்னும் கொஞ்சம் பெட்டர பண்ணிருக்கலாம்ல :

  • எனக்கு கதைல குறைன்னு எதுவும் படல. கதையின் முக்கிய கதாபாத்திரமா ஆரம்பத்தில் இருந்த அபிராமி நீண்ட நேரம் காணாம போனது கொஞ்சம் வருத்தமா இருந்தது!



View all my reviews

No comments:

Post a Comment