Showing posts with label kalki. Show all posts
Showing posts with label kalki. Show all posts

Tuesday, 8 September 2015

Review : பொன்னியின் செல்வன் #5

பொன்னியின் செல்வன் - தியாக சிகரம் (#5) [Ponniyin Selvan - Thiyaga Sigaram]பொன்னியின் செல்வன் - தியாக சிகரம் (#5) [Ponniyin Selvan - Thiyaga Sigaram] by Kalki

My rating: 5 of 5 stars

வழக்கமாக இருப்பதை விட அதிக திருப்பங்கள், உற்சாகம், விறுவிறுப்பை இந்த பாகத்தில் காட்டிவிட்டார் கல்கி. முதல் பக்கத்தில் தொடங்கிய வேகம், மணிமகுட விழா வரை சற்றும் குறையவில்லை. கடைசி 100 பக்கங்களில் வேகம் சற்று குறைந்ததாகவே தோன்றியது. எதிர்பாராத பல திருப்பங்கள் இந்த பாகத்தில் உள்ளன. இருந்தாலும், இந்த பாகத்துடன் முடிக்காமல், கதையை கல்கி அவர்கள் இன்னும் தொடர்ந்திருக்கலாம். கதை முற்றியதாக தோன்றவும் இல்லை. அப்படி நடந்தது பிடிக்கவும் இல்லை. :(


கிட்டத்தட்ட 50 வருடங்களுக்கு மேல் ஆனாலும், ஏன் இந்த புதினம் இன்றும் சிறந்த தமிழ் புத்தகங்களில் ஒன்றாக கருதப்படுகிறது என்பதை இதை படிப்பவர் மட்டுமே உணரமுடியும். மூன்றரை வருடம் ஒரு வார தொடர்கதை மக்களால் தொடர்ந்து படிக்கப்படுவது சாதாரணமாக நடப்பதன்று.
அதை கல்கியை தவிர வேறு யாராலும் சாதித்திருக்க/சாதிக்க முடியும் என்று தோன்றவில்லை.


View all my reviews